எதிர்பாரா நேரத்தில் திடீரென விலை உயர்ந்தது மைக்ரோமேக்ஸ் In நோட் 1!


மைக்ரோமேக்ஸ் In நோட் 1 ஸ்மார்ட்போன் குறைவான விலையில் பல சிறப்பான அம்சங்களை வழங்கும் ஒரு  ஸ்மார்ட்போன் என்று சொல்லலாம். 

இந்த சாதனம் 6.67 அங்குல IPS LCD டிஸ்பிளேவை 21:9 என்ற விகிதத்திலும் மற்றும் 1080 x 2400 பிக்சல்கள் FHD+ ரெசல்யூஷன் உடன் கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளே 450 நைட்ஸ் உச்ச பிரகாசத்தை ஆதரிக்கிறது மற்றும் செல்ஃபி கேமராவிற்கு பஞ்ச்-ஹோல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

சாதனம் ஒரு குவாட்-லென்ஸ் கேமரா தொகுதியை வழங்குகிறது, இது 48MP பிரதான லென்ஸ் மற்றும் 5MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் கொண்டுள்ளது. மேக்ரோ மற்றும் டெப்த் சென்சாராக செயல்படும் இரண்டு 2MP சென்சார்களையும் இந்த சாதனம் கொண்டுள்ளது. இந்த சாதனம் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 16MP கேமராவைக் கொண்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் In நோட் 1 ஹீலியோ G85 செயலியில் இயங்குகிறது. ஆக்டா கோர் மீடியாடெக் மிட்-ரேஞ்ச் செயலி 12nm கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது மற்றும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சாதனம் ஆன்ட்ராய்டு 10 OS உடன் அறிமுகம் செய்யப்பட்ட்டது, ஆனால் இப்போது Android 11 புதுப்பிப்பைப் பெறத் தொடங்கியுள்ளது.

சாதனம் 4ஜி LTE, இரட்டை சிம் ஆதரவு, 3.5 மிமீ ஹெட்போன் ஜேக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-C போர்ட் இணைப்பு ஆகியவற்றை வழங்குகிறது. பேட்டரியைப்பொறுத்தவரை, இந்த மைக்ரோமேக்ஸ் In 1 ஸ்மார்ட்போன் 5,000 mAh பேட்டரியை 18W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் கொண்டிருக்கும்.

close