நந்திகிராம் தொகுதியில் பின்தங்கிய மம்தா பானர்ஜி..! ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கையில் சுவேந்து அதிகாரி முன்னிலை..!


ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிந்து, இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மேற்கு வங்காளத்தின் பூர்பா மெடினிபூர் மாவட்டத்தில் நந்திகிராம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் எட்டு கட்டங்களாக மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் திரிணாமுல் கட்சிக்கும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

தேர்தலுக்கு முன்பாக, திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் பாஜகவிற்கு தாவினர். சிங்கூரில் டாடா கம்பெனியை வரவிடாமல் தடுத்த போராட்டத்தின் மூலம் மம்தா பானர்ஜி செல்வாக்கு பெற முக்கிய காரணமாக இருந்த சுவேந்து அதிகாரியும் இந்த கட்சித் தாவலில் அடக்கம்.

சுவேந்து அதிகாரி கட்சி தாவியதால், அவரின் கோட்டையாக கருதப்படும் மெடினிபூர் பகுதிகளில் உள்ள சுமார் 60-70 தொகுதிகளில் திரிணாமுல் கட்சியின் வெற்றி கேள்விக்குறியானது. இதனால் நிலைமையை மாற்ற, மம்தா பானஜோ தான் வழக்கமாக போட்டியிடும் தொகுதியை விட்டுவிட்டு, சுவேந்து அதிகாரியின் கோட்டையாக கருதப்படும் நந்திகிராமில் அவருக்கு எதிராகவே களமிறங்கினார்.

இந்த நந்தி கிராம் தொகுதி இந்தியா முழுவதும் உற்றுநோக்கும் தொகுதியாக மாறிவிட்டது. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகள் என அனைத்திலும், சுவேந்து அதிகாரியை வீழ்த்துவது மம்தா பானர்ஜிக்கு மிகவும் கடினம் என்றும், மம்தா தோல்வியை தழுவக் கூட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவின் ஆரம்ப கட்டத்தில்லேயே சுவேந்து அதிகாரி முன்னிலையை தக்கவைத்து, திரிணாமுல் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


close