நடிகர் அஜீத் பிறந்தநாள்… பிரபலங்கள் வாழ்த்து!…

 


தனது 50வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் அஜீத்குமாருக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பல வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்கள் கொண்டாடும் நடிகராக உள்ளார் நடிகர் அஜீத். தற்போது ‘வலிமை’ படத்தில் நடித்து அவர், தனது 50வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அஜீத் பிறந்தநாளையொட்டி நடிகர் அருண் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்த பிறந்தநாளில் உங்கள் மனிதநேயத்தை கொண்டாடுகிறோம். இந்த தொற்றுநோய் நேரத்தில் உங்கள் பொறுப்புணர்வை அனைவருக்கும் கற்றுக்கொடுங்கள். இதை உங்கள் ரசிகர்கள் பின்பற்றவும், பாதுகாப்பாக இருக்க விரும்புகிறேன். நீங்கள் நல்ல ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியுடனும் இருக்க, கடவுள் உங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள பதிவில், எங்கள் தலைமுறைக்கும் இனி வரும் அடுத்த தலைமுறைகளுக்கும் என்றென்றும் நீங்கள்தான் ‘தல’! இன்று மட்டுமல்ல தமிழ் சினிமா இருக்கும் வரை அதில் அஜித் எனும் தன்னம்பிக்கை நாயகனின் பெயர் ஒலித்துகொண்டே இருக்கும். பிறந்தநாள் வாழ்த்துகள் அஜித் சார்! என்று தெரிவித்துள்ளார்.

இதேபோன்று நடிகர் சிபி சத்யராஜ் வெளியிட்டுள்ள பதிவில், அன்பு தல அஜித்குமார் அவர்களுக்கு இந்த ஆண்டு வலிமையான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.. என கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா..!! எல்லா நலமும் பெற்று வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

close