ஆக்சிஜன் செறிவூட்டிகளை தனிநபர் பயன்பாட்டிற்கு இறக்குமதி செய்ய அனுமதி..! மத்திய அரசு உத்தரவு..!


2015-2020 வெளியுறவு வர்த்தகக் கொள்கையை மத்திய அரசாங்கம் திருத்தியுள்ளதுடன், நாட்டில் கொரோனா பாதிப்புகள் பெருமளவில் அதிகரித்துள்ள நிலையில் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ஆக்சிஜன் செறிவூட்டிகளை இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளது. 

விலக்கு வகைகளின் பட்டியலில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சுங்க அனுமதியில் இவற்றை பரிசுகளாக குறிப்பிட கோரப்பட்டுள்ளது.

இந்த ஆக்சிஜன் செறிவுகளை அஞ்சல், கூரியர் அல்லது ஈ-காமர்ஸ் போர்ட்டல்கள் மூலம் வாங்கலாம்.

ஆக்சிஜன் செறிவூட்டல்களுக்கான விலக்கு தனிப்பட்ட பயன்பாட்டிற்காக 2021 ஜூலை 31 வரை அனுமதிக்கப்படுகிறது என்று நேற்று வெளியிடப்பட்ட வெளிநாட்டு வர்த்தக இயக்குநரக (டிஜிஎஃப்டி) அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்புகளின் தற்போதைய எழுச்சியால் இந்தியாவின் சுகாதார அமைப்பு அதிக அழுத்தத்தில் உள்ளது மற்றும் ஆக்சிஜன், படுக்கைகள் மற்றும் மருந்துகளின் பற்றாக்குறை உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே நேற்று ஒரே நாளில், நாட்டில் முதல்முறையாக நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. நாட்டில் 4,01,993 பாதிப்புகள் நேற்று மட்டும் பதிவாகியுள்ளன. இதன் மூலம் இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1,91,64,969’ஆக உயர்ந்துள்ளது.

close