ஆரோக்கியமான சருமம் வேண்டுமா… தேனை இப்படி யூஸ் பண்ணுங்க!!!


தேன் ஒரு இயற்கை இனிப்பானாகும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் இனிப்பு பண்டம் அல்லது பானங்களில் இதனைச் சேர்க்கலாம். தேனீக்களால் தயாரிக்கப்படும் இந்த பொருளான தேன்  உண்மையிலேயே  இயற்கையின் ஒரு பரிசு ஆகும். இது பல ஆரோக்கிய நலன்களைக் கொண்டிருப்பதோடு மட்டும் இல்லாமல், உங்கள் தோல் ஆரோக்கியத்திற்கும் மிகச் சிறந்ததாக இருக்கும்!

தோல் தொடர்பான வீட்டு வைத்தியத்தின்  ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் தேன் அதன் சக்திவாய்ந்த பண்புகளுக்கு பழங்காலத்தில் இருந்து பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் தேனில் ஆண்டிமைக்ரோபையல் பண்புகள் உள்ளன. அவை முகப்பரு மற்றும் தோல் நோய்த்தொற்றுகளைக் குறைக்க உதவும். மேலும்  காயங்களை குணப்படுத்துவதற்கும் எரிச்சலூட்டும்  சருமத்திற்கு நிவாரணம் அளிப்பதற்கும் தேன் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. வறண்ட சருமத்திற்கு தேன் ஒரு வரமாகவும் இருக்கிறது. ஏனென்றால் இது இயற்கையாகவே சருமத்தை  ஈரப்பதமாக்குவது மட்டுமல்லாமல், இது ஒரு ஹியூமெக்டன்ட் (humectant) ஆகும். இதன் பொருள் சருமத்தில் ஈரப்பதத்தை பூட்டுவதற்கான தனித்துவமான தரம் கொண்டது. தேன் நிச்சயமாக உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று சொல்ல தேவையில்லை!ஆரோக்கியமான மற்றும் நீரேற்றப்பட்ட சருமத்திற்கு உங்கள் அழகு பராமரிப்பில் தேனை சேர்க்க மூன்று வழிகள்:

1. ஃபேஸ் மாஸ்க்:

ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டரில் ஒரு தேக்கரண்டி  தேன், ஒரு தேக்கரண்டி முல்தானி மிட்டி சேர்க்கவும். இதனை ஒரு  பேஸ்டாக நன்கு  கலக்கவும். இந்த முகமூடியை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.

முல்தானி மிட்டி சருமத்தை ஆற்றுவதோடு மட்டுமல்லாமல், துளைகளையும் சுத்தப்படுத்துகிறது. இறந்த சரும செல்கள் மற்றும் பிரேக்அவுட்கள் மற்றும் பிளாக்ஹெட்ஸை ஏற்படுத்தக்கூடிய அசுத்தங்களையும் சருமத்தில் இருந்து அழிக்கிறது. அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது. ரோஸ் வாட்டர் எரிச்சலூட்டும் சருமத்தை ஆற்றும். தேன் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது.

2. சருமத்தை வெளியைற்ற:

ஒரு டீஸ்பூன் காபி பொடியில் இரண்டு டீஸ்பூன் தேன், அரை டீஸ்பூன் மஞ்சள் சேர்க்கவும். இந்த பொருட்களை ஒன்றாக கலந்து மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் உங்கள் முகத்தை தேய்க்கவும். கன்னங்கள், மூக்கு   போன்ற பகுதிகளை  நன்கு தேய்க்கவும். உங்கள் சருமத்தை மிக மெதுவாக துடைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் அல்லது அது எரிச்சலை ஏற்படுத்தும்.

காபி சருமத்தில் உள்ள இறந்த செல்களை  வெளியேற்ற ஒரு நல்ல ஸ்க்ரப் போல வேலை  செய்கிறது. கூடுதலாக, காபியில் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அவை தோல் சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாட்டை எதிர்த்துப் போராட உதவும். மஞ்சள் சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது முகப்பருவைத் தவிர்க்கவும், சருமத்தை தெளிவாக வைத்திருக்கவும் உதவும். மேலும், இது உங்கள் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை வழங்குகிறது!  அது மட்டும் இல்லாமல் இது உங்கள் சருமம் நீரேற்றமாக இருக்க உதவும்.

3. மசாஜ் எண்ணெய்: 

வீட்டிலேயே ஸ்பா போன்ற முடிவுகளைப் பெற விரும்பினால், ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயில் அரை டீஸ்பூன் தேன் சேர்க்கவும். இரண்டு பொருட்களையும் ஒன்றாக கலந்து உங்கள் முகத்தில் தடவவும். இந்த கலவையுடன் உங்கள் தோலை 15 முதல் 20 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பிறகு  வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

ஆலிவ் எண்ணெய் ஆழமாக நீரேற்றம் செய்யப்படுவதோடு, வறண்ட, மந்தமான மற்றும் எரிச்சலூட்டும் சருமம் போன்ற நிலைமைகளைத் தவிர்ப்பதற்காக, பழங்காலத்தில் இருந்து பயன்படுத்தப்படுகிறது. தேன் ஒரு ஹியூமெக்டன்ட், மற்றும் உங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை பூட்ட உதவுகிறது. எனவே, இந்த இயற்கையான அமுதத்தை உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தில் சேர்க்கவும்!

close