பொன் விழாவை கொண்டாடும் அஜீத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!…


50வது பிறந்தநாளை கொண்டாடும் அஜீத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜீத். தமிழ் சினிமாவில் தனிக்கென தனி இடத்தை பிடித்திருக்கும் இவருக்கு உலகெங்கும் ஏராளாமான ரசிகர்கள் உள்ளனர். எந்த பந்தாவும் இல்லாமல் எளிமையான மனிதனாக திரையுலகில் வலம் வருகிறார். ரசிகர்களால் ‘தல’ என அன்போடு அழைக்கும் அஜீத், அனைவருக்கும் பிடித்தமான நடிகராக உள்ளார்.

நீண்ட நாட்களாக திரையுலகில் இருக்கும் இவரின் சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம். பல வெற்றிப்படங்களை கொடுத்து இன்று வரை ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இவருக்கு இன்று 50வது பிறந்தநாள். இதையொட்டி திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிறந்தநாள் கொண்டாடும் அஜீத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் “நீங்கள் வாழ்வில் பல சோதனைகளை கடந்து சாதனைகள் படைத்தது போல் இந்த இக்கட்டான சூழ்நிலையையும் நாங்கள் கடப்போம் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்கு இனிய பொன் விழா ஆண்டு நல்வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

close