ஐபிஎல் எல்கிளாசிகோ…. இன்று வலிமையான தல தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்ளும் டான் ரோகித்தின் மும்பை இந்தியன்ஸ்!

 


ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 27வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இரு சாம்பியன் அணிகள் மோதுவதால் இந்த போட்டியின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. இதில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எதிரிகளாக பார்க்கப்படும் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இன்றைய லீக் போட்டியில் எதிர்கொள்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பாதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் செட்டிலான அணியாக காணப்படுகிறது.

அசைக்க முடியாத துவக்க பார்ட்னர்ஷிப், சரியான அளவிலான வேகப்பந்து மற்றும் சுழல் பந்துவீச்சு. ஒன் மேன் ஆர்மி ரவீந்திர ஜடேஜா என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் பலமான அணியாக இந்த ஆண்டு காணப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை போல அனைத்தும் இருந்தபோதும், இந்தாண்டு அந்த அணிக்கு சாதகமான ஆண்டாக அமையவில்லை என்று சொல்லவேண்டும்.

இதற்கு மும்பை அணி சரியான லெவன் வீரர்களை தற்போதுவரை தேர்வு செய்யவில்லை எனலாம். பவுலிங்கில் நதன் கூல்டர் நைலை மீண்டும் கூட்டணியில் சேர்ப்பதா அல்லது இஷான் கிஷானை கொண்டுவருவதா என்ற குழப்பத்தில் உள்ளது. ஒருவேளை கூல்டர் நைலை வெளியேற்றினால் போலார்டு மீது பௌலிங் சுமை என்ற பெரிய பொறுப்பு வரும். இதனால் இன்று அந்த அணி எப்படிப்பட்ட கூட்டணியுடன் களம் இறங்கி உள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஃபாப் டூபிளசி, ருதுராஜ், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா என செட்டிலான பேட்டிங் வரிசையைக் கொண்டு களம் இறங்கும். இதில் பெரும்பாலும் மாற்றங்கள் இருக்காது என்றே தெரிகிறது. அதேநேரம் பவுலிங்கை பொருத்தவரையில் லுங்கி நிகிடி அல்லது இம்ரான் தாஹிர் இருவரை மாற்றி மாற்றி சரியான அளவில் தோனி பயன்படுத்தி வருகிறார்.


மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை கடந்த ஆண்டு சிறந்த பேட்டிங் வரிசை இருந்தது. இந்த ஆண்டு ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவை தவிர்த்து கடந்த போட்டியில் குயின்டன் டி காக் ஓரளவுக்கு எழுச்சி பெற்றார். இதே போல அந்த அணியின் அதிரடி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஹர்திக் பாண்டியா, போலார்டு உள்ளிட்டோரும் எழுச்சி பெற்றால் சென்னைக்கு தொல்லை தரலாம். கூடுதல் பேட்ஸ்மேனை சேர்ப்பத அல்லது கூடுதலாக ஒரு பவுலர்களை கொண்டு களம் இறங்குவதா என்ற குழப்பத்திலேயே அந்த அணி இன்றைய போட்டியில் களமிறங்க உள்ளது. இதனால் இன்று எப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சமாளிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

close