வங்கதேச வீரர்களில் இந்த சாதனையை படைத்த 3வது வீரர்… புதிய மைல்கல்லை எட்டிய மெஹிதி ஹசன்..!!


இலங்கை – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில், முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற வங்கதேச அணி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர், வங்கதேச அணியின் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன்.

இவர் முதல் போட்டியில் 30 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டும் வீழ்த்தினார். 7 விக்கெட்டுக்களை கைப்பற்றிய மெஹிதி ஹசன், ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் 5ம் இடத்தில் இருந்து 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதன்மூலம், வங்கதேச வீரர்களான சாஹிப் அல் ஹசன், அப்துர் ரசாக் ஆகியோருக்குப் பிறகு ஐசிசி தரவரிசையில் முதல் இரண்டு இடங்களுக்குள் முன்னேறிய வங்காளதேச வீரர் என்ற சாதனையை மெஹிதி ஹசன் பெற்றுள்ளார்.

முதல் இன்னிங்சில் 84 ரன்களும், 2-வது இன்னிங்சில் 125 ரன்களும் விளாசிய முஷ்பிகுர் ரஹ்மான் 14-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

close