திமுகவின் 180+ கனவை சிதைத்த கொங்கு மண்டலம்..! அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அதிமுக..! பரபர பின்னணி..!


அதிமுகவின் இரும்புக் கோட்டையாக திகழும் கொங்கு மண்டலத்தில் இந்த முறை திமுக, அதிமுகவை தகர்த்தெறியும் என தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பல கூறினாலும், கொங்கு மண்டலம் எப்போதும் அதிமுகவின் கோட்டை தான் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஏப்ரல் 6’ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் திமுக கூட்டணி 139 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 94 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.மக்கள் நீதி மையம் ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது.

எனினும் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் இடையேயான வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவாகவே இருப்பதால், நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம் எனும் சூழல் தான் தற்போது நிலவுகிறது.

திமுக 180 இடங்களைக் கைப்பற்றும் என பல கருத்துக் கணிப்புகள் கூறிவந்த நிலையில், திமுகவின் 180+ கனவுக்கு கொங்கு மண்டலம் கடும் சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பான்மையான கருத்துக் கணிப்புகளில், கொங்கு மண்டலத்தில் திமுக 30 முதல் 35 இடங்களைக் கைப்பற்றும் எனவும், அதிமுக 20 இடங்களை மட்டுமே அதிகபட்சம் பெரும் எனவும் கூறப்பட்டு வந்தது.

ஆனால், இதற்கு நேரெதிராக கொங்கு மண்டலத்தில் உள்ள பல மாவட்டங்களில் தற்போது அதிமுகவே முன்னிலையில் உள்ளது. 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக வென்ற சில தொகுதிகளிலும் கூட, அதிமுக முன்னிலையில் உள்ளது.

கொங்கு மண்டலத்தில் மொத்தம் உள்ள 54 தொகுதிகளில் 28 தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது. 

கடந்த 2016 தேர்தலில் கொங்கு மண்டலத்தில் இருந்த 54 தொகுதிகளில் 44 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. திமுக மற்றும் அதன் கூட்டணி காட்சிகள் 10 தொகுதிகளை மட்டுமே திமுக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது திமுகவின் 180+ கனவுக்கு கொங்கு மண்டலம் ஆப்பு வைத்துள்ளதோடு, தொடர்ந்து இது அதிமுகவின் இரும்புக் கோட்டைதான் என நிரூபித்துள்ளது.

close