ரயில் சேவைகள் மேலும் 15 நாட்களுக்கு ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு!


சென்னை: கொரோனா தொற்று அச்சம், ஊரடங்கு ஆகியவற்றினாலும், பயணிகள் வருகை குறைவாக இருப்பதாலும் 12 சிறப்பு ரயில்களை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு காரணமாக ஜூன் 1-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்த ரயில் சேவைகள் மேலும் 15 நாட்களுக்கு ரத்து நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதன்படி, இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், சோழன் எக்ஸ்பிரஸ் ரயில், ‘ஏசி’ டபுள் டெக்டர் எக்ஸ்பிரஸ் தேஜஸ் ரயில் மற்றும் நாகர்கோவில் – கோவை, கோவை – மங்களூரு இடையே தினமும் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் உள்ளிட்டவை வருகிற ஜூன் 15 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.


close