அதிக அளவில் இந்து மதம் திரும்பும் மக்கள்..! புதிய மாற்றத்தை நோக்கி கேரளா..! பரபர பின்னணி..!


கேரள பாஜக தனது தேர்தல் அறிக்கையில், இந்து மற்றும் கிறிஸ்தவ மக்களிடையே முக்கிய பிரச்சினையாக விளங்கும் லவ் ஜிகாத்துக்கு எதிராக உத்தரபிரதேசம் போல் சட்டமியற்றுவதாக உறுதியளித்துள்ள நிலையில், கேரள அரசாங்க கெஜட்டிலிருந்து பெறப்பட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2020’ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, புதிய மதமாற்றத்தில் அதிகமான நபர்கள் மீண்டும் இந்து மதம் திரும்பியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. 2020’ஆம் ஆண்டில் நடந்த ஒட்டுமொத்த மதமாற்றத்தில், கேரளாவில் 47 சதவீத மத மாற்றங்கள் இந்து மதம் திரும்பியது தான்.

மத மாற்றத்தை அரசாங்கத்தில் பதிவு செய்த மொத்த 506 பேரில், 241 பேர் கிறிஸ்தவம் அல்லது இஸ்லாத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியவர்கள் ஆவர். 144 பேர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர், அதே நேரத்தில் கிறிஸ்தவ மதத்தை புதிதாக ஏற்றுக்கொண்டவர்கள் 119 பேர் என தரவுகள் காட்டுகின்றன.

இதில் 32 பேர் இந்து மதத்திற்கு திரும்புவதற்காக இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேறியுள்ளனர்

விதிப்படி, சிறுபான்மையினர் உட்பட தங்கள் மதத்தை அதிகாரப்பூர்வமாக மாற்றும் நபர்கள் அதை அரசின் கெஜட்டில் விளம்பரம் செய்ய வேண்டும். இந்து மதத்திற்கு புதிதாக மாற்றப்பட்டவர்களில் 72% பேர் தலித் கிறிஸ்தவர்கள் ஆவர். இவர்களில் பெரும்பாலும் கிறிஸ்தவ சேரமர்கள், கிறிஸ்தவ சம்பாக்கள் மற்றும் கிறிஸ்தவ புலயர்களே உள்ளனர். பல தலித் கிறிஸ்தவர்கள், மீண்டும் இந்து மதத்தை ஏற்றுக்கொண்டுள்ளது மிக முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது. மேலும், 32 பேர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி இந்து மதத்தில் சேர்ந்தனர்.

கிறிஸ்தவம் 242 மற்ற இரண்டு மதங்களிடம் இழந்து 119 நபர்களை மதமாற்றத்தின் மூலம் புதிதாக பெற்றுள்ளது. இஸ்லாமுக்கு 144 பேர் மதம் மாறியுள்ளார் மற்றும் இந்த காலகட்டத்தில் 40 பேரை இஸ்லாம் இழந்தது. இந்து மதத்திலிருந்து இரண்டு பேர் புத்த மதத்திற்கு மாறியுள்ளனர்.

இஸ்லாமிற்கு புதியதாக மாறியவர்களில் 77% இந்துக்கள் மற்றும் 63% பெண்கள். இதில் ஈழவா, தியா மற்றும் நாயர் சமூகங்களைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான நபர்கள் உள்ளனர். 13 பெண்கள் உட்பட 25 பேர் இந்து ஈழவாவிலிருந்து இஸ்லாத்திற்கு மாறினர்.

இஸ்லாமிய மதத்திற்கு மாறிய தியா சமூகத்தில் 11 பெண்கள் உட்பட 17 பேர் உள்ளனர். 12 பெண்கள் உட்பட 17 நாயர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறியுள்ளனர். கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாத்திற்குச் சென்ற 33 நபர்களில் 9 பேர் சிரிய கத்தோலிக்கர்கள். இதில் இரண்டு பெண்கள் அடங்குவர்.

மற்ற மாதங்களுக்கு மாறியவர்களைப் போல் அல்லாமல், இஸ்லாமிய மதத்திற்கு மாறியவர்களில் பெண்கள் மிக அதிக அளவில் உள்ளது, லவ் ஜிகாத் குற்றச்சாட்டுகளை உறுதி செய்யும் வகையில் உள்ளதாக, லவ் ஜிகாத்தை எதிர்க்கும் கேரள மக்கள் தெரிவித்துள்ளனர்.

close