கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘சர்தார்’ படத்தின் கதை, இந்த பாக்கியராஜ் படத்தின் காப்பியா!?

 


நடிகர் கார்த்தி தற்போது இரும்புத்திரை பட இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் ‘சர்தார்’ என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். நேற்று முன்தினம் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

சர்தார் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

தற்போது சர்தார் படத்தின் கதை, இயக்குனர் கே. பாக்கியராஜின் பழைய படத்தின் கதையை காப்பியடித்து எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. சர்தார் படத்தில் பழிவாங்கத் துடிக்கும் அப்பாவை எதிர்த்துப் போராடும் மகன் என்றவாறு கதை அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இது பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான ‘ஒரு கைதியின் டைரி’ படத்தின் கதை. அந்தப் படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார். எனவே பிஎஸ் மித்ரன் சர்தார் படத்தின் கதையை, காப்பியடித்து தான் இயக்குகிறார் என்று கோலிவுட்டில் ஒரு பேச்சு எழுந்துள்ளது.

ஒரு சிலர் ஹீரோ பட கதை உரிமை காரணமாக பாக்கியராஜ், மித்ரனுக்கு எதிராக பேசியதால் அவரைப் பழிவாங்க இப்படி செய்துள்ளார் என்றும் பேச ஆரம்பித்துவிட்டனர்.

விரைவில் இதுகுறித்த தெளிவு கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம்!

close