டைமன்சிட்டி 700, 5000 mAh பேட்டரியுடன் ஓப்போ A53s 5ஜி இந்தியாவில் அறிமுகம் | விலை & விவரங்கள்


ஓப்போ இன்று தனது A-தொடரில் ஓப்போ A53s 5ஜி என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. தொலைபேசியில் மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட் மற்றும் பெரிய 5000 mAh பேட்டரி போன்ற முக்கியமான சிறப்பம்சங்கள் உள்ளது.

ஓப்போ A53s 5G விலை விவரங்கள்

ஓப்போ A53s 5ஜி 6 ஜிபி ரேம் 128 ஜிபி ஸ்டோரேஜ் பதிப்பின் விலை ரூ.14,990 ஆகவும், 128 ஜிபி ஸ்டோரேஜ் பதிப்பைக் கொண்ட 8 ஜிபி ரேம் ரூ.16,990 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பளிங்கு நீலம் மற்றும் மைக்கருப்பு வண்ணங்களில் வருகிறது, இது பிளிப்கார்ட்டிலிருந்து மே 2 முதல் கிடைக்கும்.

ஓப்போ A53s 5G விவரக்குறிப்புகள்

ஓப்போ A53s 5ஜி 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளேவுடன் 1600 x 720 பிக்சல்கள் ரெசல்யூஷன், 60 Hz புதுப்பிப்பு வீதம், 88.7% ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் மற்றும் 480 நைட்ஸ் உச்ச பிரகாசத்துடன் கிடைக்கிறது. 

இந்த ஸ்மார்ட்போன் 2.2GHz கடிகார வேகத்துடன் மீடியா டெக் டைமன்சிட்டி 700 சிப் உடன் இயக்கப்படுகிறது மற்றும் SA / NSA டூயல்-மோட் 5ஜி நெட்வொர்க்கை ஆதரிக்கிறது. இந்த தொலைபேசி 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் கிடைக்கிறது, இதை 1 TB வரை மைக்ரோ SD கார்டு வழியாக விரிவாக்கப்படலாம்.

கேமராவைப் பொறுத்தவரை, ஓப்போ A53s 13 மெகாபிக்சல் (f/2.2) மெயின் கேமரா, மூன்று மெகாபிக்சல் (f/2.4) மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் (f/2.4) ஆழ சென்சார் ஆகியவற்றை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவும் (f/2.0) உள்ளது. இது ஒரு பக்கமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உடன் வருகிறது.

ஓப்போ A53s 5ஜி ஆண்ட்ராய்டு 11 இல் கலர் OS 11.1 உடன் இயங்குகிறது மற்றும் 5,000 mAh பேட்டரி உடன் ஆற்றல் பெறுகிறது, இது 10W ஸ்டாண்டர்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது. இணைப்பு அம்சங்களில் 5ஜி, வைஃபை 802.11 ac, புளூடூத் 5.1, GPS / GLONASS, யூ.எஸ்.பி டைப்-C மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை அடங்கும்.

close