மேற்குவங்காள சட்டசபை தேர்தலுக்கான 7ம் கட்ட வாக்குப்பதிவு: இதுவரை 55.12% வாக்குகள் பதிவு!!

 


கொல்கத்தா: மேற்கு வங்காள சட்டசபை தேர்தலுக்கான 7ம் கட்ட வாக்குப்பதிவில் இதுவரை 55.12% வாக்குகள் பதிவாகியுள்ளன.

294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 27ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்த நிலையில், கடந்த 22ம் தேதி 6ம் கட்ட தேர்தல் முடிந்தது.

இதுவரை மொத்தம் 223 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துள்ளது. இதற்கிடையில், மேற்குவங்காளத்தின் மால்டா, கொல்கத்தா தெற்கு, முர்ஷிதாபாத், மேற்கு பர்தமான், தெற்கு தினாஜ்பூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு உள்பட்ட 34 தொகுதிகளுக்கு இன்று 7ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

முன்னதாக, 7ம் கட்ட தேர்தலில் 36 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 2 தொகுதிகளில் (சம்ஜர்கஞ்ச், ஜங்கிப்பூர்) சஞ்சுக்தா மோச்சா கட்சி சார்பில் களமிறக்கப்பட்டிருந்த 2 வேட்பாளர்கள் மரணமடைந்ததையடுத்து அந்த தொகுதிகளுக்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட 2 தொகுதிகளுக்கும் மே 16ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்குவங்காளத்தில் 34 தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் 7ம் கட்ட தேர்தலில் பதிவாகி வரும் வாக்குப்பதிவு சதவிகிதம் தொடர்பான விவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.

அதன்படி, காலை 9.32 மணி நிலவரப்படி 17.47 சதவிகிதமும், காலை 11.36 மணி நிலவரப்படி 37.72 சதவிகிதமும், மதியம் 1.32 மணி நிலவரப்படி 55.12 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


close