3-4-2021 தினப்பலன் – நிதி நிலை சவாலாக இருக்கும்!

 


இன்றைய ராசி பலன்!

மேஷம்

திருப்திகரமான நாளாக இருக்கும். ஆன்மிகம், பொழுதுபோக்கில் மனம் ஈடுபாடு காட்டும். பணிச் சூழல் பதற்றமாக இருக்கும். அனுசரணை போக்கை கையாள்வதன் மூலம் வேலைப் பளுவைக் குறைக்கலாம். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இல்லை.

ரிஷபம்

சற்று கடினமான சூழல் காணப்படும். நிதானத்தைக் கைவிடாமல் செயல்படுவது நல்லது. வேலையில் கடினமான சூழல் காணப்படும். கவனக் குறைவு காரணமாக தவறுகள் நேரலாம். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் ஏற்பட ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவது நல்லது. பணப் புழக்கம் குறைவாக இருக்கும்.

மிதுனம்

உற்சாகமான நாளாக இருக்கும். மனதில் புத்துணர்வு அதிகரிக்கும். புதிய நபர்களை சந்தித்துப் பேசுவீர்கள். வேலையில் சிறப்பான சூழல் நிலவும். கடின உழைப்புக்கு ஏற்ற பயனும் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். பணப் புழக்கம் அதிகமாக இருக்கும்.

கடகம்

சௌகரியமான நாளாக இருக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் வெற்றி பெறும். வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். குறித்த நேரத்துக்கு முன்னதாகவே வேலையை முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே நல்லுறவு மற்றும் நல்லிணக்கம் காணப்படும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.

சிம்மம்

சுமாரான நாளாக இருக்கும். கடினமான சூழலை சந்திக்க வேண்டியிருக்கும். அது வளர்ச்சியை பாதிக்கும் வகையில் அமையலாம். வேலைப் பளு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். குடும்ப செலவுக்கு போதுமான நிதி இன்றி திணறும் சூழல் ஏற்படும்.

கன்னி

கடினமான சூழல்களை சந்திக்க வேண்டியிருக்கும். நிதானத்தை கைவிடாமல் முயற்சிகளை தொடர்ந்தால் வெற்றி கிட்டும். வேலையில் கடினமான சூழல் காணப்படும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்காது. கணவன் மனைவி இடையே உறவில் சமநிலை பாதிக்கப்படலாம். வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள். நிதி நிலை சாதகமாக இருக்காது. வீண் செலவு அதிகரிக்கும்.

துலாம்

எதிர்பாராத நன்மைகள் வந்து திக்குமுக்காடச் செய்யும். மன வலிமை குறைந்து காணப்படும். தைரியத்தை மட்டும் கைவிட்டுவிடாதீர்கள். வேலையில் உற்சாகமான ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

விருச்சிகம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். உங்களை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வைத்திருப்பது நல்லது. வேலையில் சாதகமான சூழல் இருக்காது. தடைகள் சிலவற்றை சந்திக்க நேரிடலாம். கணவன் மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்கும். செலவும் அதிகரிக்கும்.

தனுசு

வெறுமையான நாளாக இருக்கும். மனக் கவலை அதிகரிக்கும். நிதானத்தை கைவிடாமல் முயற்சிகள் செய்வது நல்லது. வேலையில் நல்லதே செய்தாலும் அது கெட்டதாகவே மாறும். மன அழுத்தம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி குறையும். பொறுமையாக இருப்பது நல்லது. நிதி நிலை சாதகமாக இல்லை. செலவுக்கு மேல் செலவு வரும். பண விஷயத்தில் கவனம் தேவை.

மகரம்

மன அமைதி குறையும் நாளாக இருக்கும். குடும்பத்தினர், உடன் பணியாற்றுபவர்களுடன் வீண் வாக்குவாதம் வரலாம்கவனம் தேவை. வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்காது. கணவன் மனைவி இடையே வீண் விவாதங்கள் எழலாம். பண வரவுக்கு வாய்ப்பு மிக மிகக் குறைவு. செலவுகள் அதிகரிக்கும்.

கும்பம்

உற்சாகமான நாளாக இருக்கும். மன தைரியம் அதிகரிக்கும். வேலையில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

மீனம்

சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் புத்திசாலித்தனத்தைச் சரியான நேரத்தில் பயன்படுத்தி இன்றைய நாளை உங்கள் வசம் ஆக்குவீர்கள். வேலையில் சிறப்பான சூழல் காணப்படும். வெற்றிகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே சுமுக உறவு நிலவும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

 

close