1-4-2021 தினப்பலன் – உற்சாகமான நாளாக இருக்கும்!


இன்றைய ராசி பலன்!

மேஷம்

ஆக்கப்பூர்வமான நாளாக இன்றைய தினம் இருக்கும். புத்துணர்வுடன் இருப்பீர்கள். வேலை, தொழிலில் சாதகமான சூழல் காணப்படும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். குடும்பத்தில் அன்பான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே நட்புறவு அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும். ஆற்றலுடனும் உற்சாகத்துடன் வேலையில் ஈடுபடுவீர்கள். உடன் பணியாற்றுபவர்கள் ஒத்துழைப்பும் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் அன்பு நிலவும். கணவன் மனைவி இடையே மனநிறைவான நிலை இருக்கும். பணப் புழக்கம் அதிகரிக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

மிதுனம்

இன்றைய தினம் நிதானத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் சாதகமான சூழலை உருவாக்கலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வேலைப் பளு அதிகரிக்கும். அடுத்தவர் பிரச்னையில் தலையிடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே புரிதல் குறையலாம். நிதி நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.

கடகம்

இன்று எந்த ஒரு காரியத்தில் இறங்கினாலும் மன உறுதியோடு செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோற்றுவதைத் தவிர்ப்பது நல்லது. வேலையில் சாதகமான சூழல் இருக்காது. குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இடைவெளி ஏற்படலாம். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. சேமிக்க முயற்சிப்பது நல்லது.

சிம்மம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். புத்திசாலித்தனத்துடன் செயல்படுவதன் மூலம் வெற்றிகளைக் குவிப்பீர்கள். வேலையில் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றிகளைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே நிதானம் தவறலாம். நல்லுறவைத் தக்கவைக்க பொறுமையுடன் நடந்துகொள்வது நல்லது. நிதி நிலை சுமாராக இருக்கும். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

கன்னி

இன்று சுமாரான நாளாக இருக்கும். மனதை பொழுதுபோக்கு, வழிபாட்டில் திசை திருப்புவதன் மூலம் அமைதி அடையலாம். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்காது. கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்தலின் மூலம் சுமுக உறவைப் பாதுகாக்கலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவு அதிகரிக்கும்.

துலாம்

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தைரியத்துடன் இருப்பீர்கள். வேலையில் கூடுதல் பொறுப்புக்கள் உங்களைத் தேடி வரும். இதைக் கையாள முடியாமல் திணறும் சூழல் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் நல்லுறவைத் தக்க வைக்கலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

விருச்சிகம்

ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். விடாது முயற்சி செய்வதன் மூலம் பலன்களைப் பெற முடியும். வேலையில் சாதகமான சூழல் இருக்காது. கொடுத்த வேலையை முடிக்க முடியாமல் திணறும் மனநிலை இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு குறையும். இனிமையான வார்த்தைகளை பேசுவதன் மூலம் மகிழ்ச்சியைக் கொண்டுவரலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது.

தனுசு

உற்சாகமான நாளாக இருக்கும். ஆற்றலுடன் இன்றைய நாளை எதிர்கொள்வீர்கள். வேலையில் உத்வேத்துடன் செயல்படுவீர்கள். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் உங்களுக்கு கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி தேவை அதிகரிக்கும். அதற்கு ஏற்ற வகையில் பணப் புழக்கம் இருக்கும்.

மகரம்

ஓரளவுக்கு திருப்திகரமான நாளாக இருக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்துக்காக, குடும்பத்தின் சௌகரியத்துக்காகச் செலவு செய்வீர்கள். வேலையில் திருப்தியான சூழல் காணப்படும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

கும்பம்

அமைதியான நாளாக இருக்கும். நிதானமாக மேற்கொள்ளும் காரியங்கள் வெற்றியையும் மகிழ்ச்சியையும் தரும். வேலையில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவு அதிகரிக்கும்.

மீனம்

சவாலான நாளாக இருக்கும். கவனத்துடன் செயல்படுவது நல்லது. சிறு கவனச் சிதறல் கூட பிரச்னைக்கு வழி வகுத்துவிடலாம். வேலைப் பளு அதிகரிக்கும். ஆனால் வேலை சூழல் சாதகமாக இருக்காது. சண்டை ஏற்படலாம் என்று தெரிந்த விஷங்கள் பற்றி வாழ்க்கைத் துணைவருடன் பகிர வேண்டாம். இது உறவில் நல்லிணக்கத்தைப் பாதிக்கச் செய்யலாம். நிதி நிலை சாதகமாக இல்லை. வீண் செலவு, பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

close