04-4-2021 தினப்பலன் – மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!


இன்றைய ராசி பலன்!

மேஷம்

தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை, தொழிலில் சாதகமான சூழல் நிலவும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு ஏற்படும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.

ரிஷபம்

மந்தமான நாளாக இன்றைய தினம் இருக்கும். இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்க முயற்சிக்க வேண்டும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்காது. கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியான சூழல் காணப்படும். நிதி நிலை சாதகமாக இருக்காது. வீண் செலவு அதிகரிக்கும்.

மிதுனம்

முன்னேற்றமான நாளாக இருக்கும். வேலையில் முழுத் திறமையையும் வெளிப்படுத்துவீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பணவரவு மகிழ்ச்சியைத் தரும். சேமிப்பு அதிகரிக்கும்.

கடகம்

முன்னேற்றமான நாளாக இன்றைய தினம் இருக்கும். புதிய முயற்சிகளில் இன்று இறங்கலாம். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். உற்சாகத்துடன் வேலையை செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். கையிருப்பு போதுமான அளவு காணப்படும்.

சிம்மம்

துடிப்பான நாளாக இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சியைத் தரும். வேலைப் பளு அதிகரிக்கும். இதனால் குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாத சூழல் ஏற்படும். கணவன் மனைவி இடையே உறவு பாதிக்கப்படலாம். ஓரளவுக்கு பணப் புழக்கம் காணப்படும். வீண் செலவுகள் இருக்கும்.

கன்னி

சாதகமான நாளாக இருக்கும். வெற்றிபெறக் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் காணப்படும். இருப்பினும் இன்று வேலையில் கவனத்துடன் இருப்பது நல்லது.  கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். செலவு அதிகரிக்கும்.

துலாம்

அனுகூலமான நாளாக இன்றைய தினம் இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை செயல்திறன் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள்.  கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பணப் புழக்கம் காணப்படும்.

விருச்சிகம்

குழப்பமான நாளாக இன்றைய தினம் இருக்கும். மனதில் தன்னம்பிக்கை குறையும். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணியாற்றுபவர்கள் ஒத்துழைப்பு இருக்காது. கணவன் மனைவி இடையே நல்லுறவு பாதிக்கப்படலாம். நிதி நிலையில் திருப்திகரமான சூழல் இருக்கும்.

தனுசு

பதற்றமான நாளாக இருக்கும். முக்கியமான முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். கவனக் குறைவு காரணமாக தவறுகள் செய்ய நேரிடும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். கணவன் மனைவி இடையே நட்புறவு நிலவ விட்டுக்கொடுப்பது நல்லது. வீண் பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

மகரம்

சுமாரான நாளாக இருக்கும். பல்வேறு தடைகளை சமாளிக்க வேண்டி வரலாம்.  வேலையில் சுறுசுறுப்பாகத் திறம்படச் செயலாற்றுவீர்கள். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் நில நட்புடன் பழகுவது அவசியம். பண வரவுக்கும் அதற்கு இணையாக செலவுக்கும் வாய்ப்புள்ளது.

கும்பம்

விருப்பங்கள் நிறைவேறும் சாதகமான நாளாக இருக்கும். ஆற்றல், வலிமை அதிகரிக்கும். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். உடன் பணியாற்றுபவர்கள், உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே உறவு சீராக இருக்கும். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

மீனம்

அலைச்சலான நாளாக இருக்கும். வேலை காரணமாக திடீர் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். பணியில் நற்பலன்களை காண்பீர்கள்.குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பணப் புழக்கம் மகிழ்ச்சியானதாக இருக்கும்.

close