02-4-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இன்றைய நாள் இருக்கும்!


இன்றைய ராசி பலன்!

மேஷம்

முன்னேற்றமான நாளாக இருக்கும். இதற்கு உணர்வுகளுக்கு இடம் கொடுக்காமல் அமைதியாக இருந்து சாதிப்பது அவசியம். வேலையில் சிறப்பான சூழல் காணப்படும். அடுத்தவர்களுடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணைவருடன் பிணைப்பு அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்காது. எதிர்பார்த்த பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

ரிஷபம்

உற்சாகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையில் சிறப்பாக செயல்பட்டு பாராட்டைப் பெறுவீர்கள். உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.

மிதுனம்

பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். நிதானமாக முடிவுகள் எடுப்பது வெற்றிகளைப் பெற்றுத் தரும். வேலையில் முன்னுரிமை எது என்று பார்த்து செயல்படுவது சாதகமாக அமையும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். விட்டுக்கொடுப்பதன் மூலம் பிணைப்பு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. செலவும் அதிகரிக்கும்.

கடகம்

சுமாரான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, அமைதியை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் வெற்றியை பெறலாம். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் இதை எதிர்கொள்ளலாம். குடும்பத்தில் அமைதி சற்று குறையலாம். நிதானமாக இருப்பதன் மூலம் குடும்ப உறவுகளுக்குள் நல்லிணக்கம் மேம்படும். தேவையை எதிர்கொள்ளும் அளவுக்கு பணப் புழக்கம் இருக்கும்.

சிம்மம்

மந்தமான நாளாக இன்றைய தினம் இருக்கும். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்வதன் மூலம் வெற்றி கிட்டும். வேலையில் கவனக் குறைவு ஏற்படும். இதன் காரணமாக வேலையில் தவறுகள் நேரலாம். குடும்பத்தில் அமைதி குறையும். நிதானமாக இருப்பதன் மூலம் கணவன் மனைவி இடையே பிரச்னையைத் தவிர்க்கலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவைக் குறைக்க முயல வேண்டும்.

கன்னி

ஆற்றல் மிக்க நாளாக இருக்கும். முக்கியமான முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்கும். உங்களின் ஆற்றல் வெளிப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்காது. கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம்.

துலாம்

ஓரளவுக்கு சிறப்பான நாளாக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. இதன் காரணமாக வேலையில் சில தவறுகள் நேரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை சுமாராகவே இருக்கும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது!

விருச்சிகம்

ஓரளவுக்கு சாதகமான நாளாகத்தான் இன்றைய தினம் இருக்கும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பணிச் சுமை அதிகரிக்கும். இதன் காரணமாக மன அழுத்தம் அதிகரிக்கலாம். குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். பணப்புழக்கம் சாதகமாக இருக்காது. கையிருப்பைக் கொண்டு சமாளிப்பீர்கள்.

தனுசு

இன்றைய நாள் தொடக்கம் சுமாராக இருக்கும்அதன் பிறகு உங்களின் செயல்பாடுகள் காரணமாக சிறப்பான நாளாக மாறும். மனதில் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். வேலையில் சில தவறுகள் நேரலாம் என்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் எழும். நிதி நிலை சாதகமாக இருக்காது. தேவையை நிறைவேற்ற முடியாமல் திணறும் சூழல் இருக்கும்.

மகரம்

சிறப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உற்சாகமாக இருப்பீர்கள். வேலை, தொழில் சூழல் இனிதாக இருக்கும். வேலையில் திருப்தியான மனநிலையை உணர்வீர்கள். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக, மன மகிழ்ச்சியைத் தரும் வகையில் இருக்கும்.

கும்பம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மனதில் பதற்றமான உணர்வு ஏற்பட்டாலும் மகிழ்ச்சியில் முடியும். குடும்பத்தினருடன் வெளியே சென்று வருவீர்கள். வேலையில் சவால்கள் வந்தாலும் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் நிலவும். நிதி நிலை சாதகமாக இருக்கும். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

மீனம்

முன்னேற்றத்துக்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும் நாள். இன்றைய நாளை பயன்படுத்திக்கொள்வது சிறப்பு. வேலையில் சாதகமான சூழல் இருக்காது. கவனத்துடன் செயல்படுவது வெற்றியைத் தரும். கணவன் மனைவி இடையே நல்லுறவு பாதிக்கப்படலாம். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பணப் புழக்கம் காணப்படும். சேமிப்பு அதிகரிக்கும்.

close